உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

கரூர்: கரூர், வாங்கல் சாலையில் அதிகளவில் குப்பை குவிந்துள்-ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர், வாங்கல் சாலை வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நி-லையில், வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.குறிப்பாக இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்-துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பை காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். குறிப்பாக, வாங்கல் சாலை வாங்கப்பா-ளையம் பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. குப்-பையை உடனடியாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை