தரமற்ற சிமென்ட் கலவையுடன் போடும் ஜல்லிக்கற்களால் ஓட்டுனர்கள் அவதி
தரமற்ற சிமென்ட் கலவையுடன் போடும் ஜல்லிக்கற்களால் ஓட்டுனர்கள் அவதிகரூர், அக். 19-கரூரில் சேதம் அடைந்த சிறுபாலத்தின் இணைப்பு சாலைகளை சீரமைக்க, தரமற்ற சிமென்ட் கலவையுடன் ஜல்லிக்கற்கள் போட்டுள்ளனர்.அவை சேதமடைந்து கற்கள் மட்டும் தெரிவதால், பல இடங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமலும், பொது மக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதிகளில், சாலையின் குறுக்கே சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில், இணைப்பு சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. இணைப்பு சாலைகளில், குழியாக உள்ள சாலைகளில், தரமான சிமென்ட் கலவையுடன், ஜல்லிக் கற்கள் போட வேண்டும்.இல்லையென்றால், தார் இணைக்கப்பட்ட, ஜல்லிக்கற்களை சேதம் அடைந்த சாலைகளில் போட வேண்டும். ஆனால், கரூர் மாநகர பகுதிகளில் குறைந்த அளவுடைய சிமென்ட் கொண்ட, ஜல்லிக்கற்களை கொண்டு, இணைப்பு சாலைகளில் நிரப்பி வைத்துள்ளனர். அதன் மீது வாகனங்கள் செல்லும் போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது. மேலும், மழை பெய்யும் போது, சிமென்ட் கரைசல் கரைந்து, ஜல்லிக்கற்கள் மட்டும் மிஞ்சுகிறது. இதனால், கற்கள் மீது வாகனங்களை ஓட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, தரமான சிமென்ட் கலவையுடன் கூடிய ஜல்லிக்கற்களை, சேதம் அடைந்த சிறு பாலங்களில் இணைப்பு சாலைகளில் போட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.