டிரைவர் விபரீத முடிவு
கரூர்:கரூர் அருகே திருமாநிலையூர் கிழக்கு தெருவை சேர்ந்த ராமன் என்பவரது மகன் ராஜேஷ், 19; டிரைவர். இவர், சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் ராஜேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, ராஜேஷின் தாய் லட்சுமி, 45; போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.