உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடன்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடன்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கரூர், நவ. 7-கல்லுாரி மாணவர்கள் கல்விக்கடன் பெற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு சார்பில், கல்லுாரி மாணவர்கள் கல்விக்கடன் பெற https://www.vidyalakshmi.co.inஎன்ற இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க தங்கள் பகுதிக்குரிய தாலுகா அலுவலகங்களில் உள்ள இ.-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி