உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடகள போட்டியில் ஈசநத்தம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தடகள போட்டியில் ஈசநத்தம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டியில், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.அரவக்குறிச்சி குறு வட்ட அளவிலான தடகள போட்டி, காகிதபுரம் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 19 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா, 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், பவித்ரா இரண்டாம் இடம், 3,000 மீட்டர் ஓட்டத்தில் கனிஷ்கா முதலிடம், பவித்ரா இரண்டாமிடம், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யா முதல் இடம், 1,500 மீட்டர் ஓட்டத்தில் திவ்யா முதலிடம், அஷ்விதா இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் நிகிதா இரண்டாம் இடம், ஈட்டி எறிதலில் காவியா மூன்றாம் இடம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் இடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.மேலும், 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சனோஜ், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். குண்டு எறிதலில் தினேஷ் மூன்றாமிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி