உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி எட்டு வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி எட்டு வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிஎட்டு வாகனங்கள் பறிமுதல்குளித்தலை, அக். 20-குளித்தலை அடுத்த, கடவூர் தெற்கு அய்யம்பாளையத்தில் உள்ள, சூர்யா நரேன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், அனுமதியின்றி கல்குவாரி நடந்து வருவதாக, குளித்தலை சப் கலெக்டர் சுவாதிஸ்ரீக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடவூர் தாசில்தார் இளம்பருதி நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தில் சோதனை செய்தார்.அப்போது அரசு அனுமதி இன்றி, கல்குவாரி சுரங்கப்பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் தாசில்தாரை பார்த்தவுடன் ஓடினர். சுரங்க பணிக்காக பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி, கம்ப்ரைசர், நான்கு பைக், ஒரு மொபட் உள்பட எட்டு வாகனங்களை தாசில்தார் பறிமுதல் செய்தார்.தாசில்தார் இளம்பருதி கொடுத்த புகார்படி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி