மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
13-Aug-2025
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுார் சாலையோரத்தில் டூவீலருடன் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.அரவக்குறிச்சி அருகே மூலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 65. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பீம் தர்வஷன் மகன் ரோஷன், 30. இவர் தடாகோவில் பகுதியில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் மலைக்கோவிலுார் சர்வீஸ் ரோடு அருகே, டூவீலரை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கர்நாடக மாநிலம், பெங்களூரு மெகா சிட்டி காலனியை சேர்ந்த மாரியப்பன், 60, என்பவர் வேகமாக ஓட்டி வந்த இன்னோவா கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த இருவர் மீதும் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கந்தசாமி, ரோஷன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். ரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து தொடர்பாக, கார் ஓட்டி வந்த மாரியப்பன் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
13-Aug-2025