சின்ன தாராபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி
அரவக்குறிச்சி, கரூரிலிருந்து, தாராபுரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது, கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். சின்னதாராபுரம் அருகே செட்டியார் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி அருக்காணி, 85. இவர் கரூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை அருகே நின்று கொண்டிருந்ததார். அப்போது அந்த வழியாக நேற்று முன்தினம் இரவு, மாருதி ஈகோ காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், சர்தார்கார் பகுதியை சேர்ந்த கணேசபுரம் என்பவர் மகன் படாராம், 38, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருக்காணியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மூதாட்டியின் மகன் சுப்பிரமணி, 62, அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.