கடம்பவனேஸ்வரர் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு: அகற்ற வேண்டுகோள்
கடம்பவனேஸ்வரர் கோவிலை சுற்றிஆக்கிரமிப்பு: அகற்ற வேண்டுகோள்குளித்தலை, செப். 26-குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், 1,500 ஆண்டு பழமையானது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் நான்கு வீதிகளிலும், நகராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தரைப்பகுதியில் உள்ள கல், மண் அகற்றும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், இக்கோவில் நான்கு வீதிகளிலும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். தார்ச்சாலை அமைக்கும் முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில் நகராட்சி கமிஷனர் நந்தகுமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் அமுதா ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.