உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு; மக்கள் அவதி

சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு; மக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்: பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலப்பட்டி, மேட்டுப்பட்டி தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால், இரவில் செல்லும்போது, எதிர்வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும், முள் செடிகள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்த்து வருகின்றன. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை