கிணற்றில் குளித்த பொறியியல் கல்லுாரி மாணவர் நீரில் மூழ்கி சாவு
குளித்தலை: கிணற்றில் குளித்த பொறியியல் கல்லுாரி மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., வடக்கு மாடு விழுந்தான் பாறை கிராமத்தை சேர்ந்தவர் முரளிதரன். 18. இவர், பெரம்பலுாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.இவரது நண்பர்கள் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, செமகோட்டை பகுதியை சேர்ந்த நவீன், 18, பிரவீன், 18, குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டியை சேர்ந்த கிருபாகரன், 18, நீலகிரி மாவட்டம், லவ்டேல் பகுதியை சேர்ந்த ராம்குமார், 24, ஆகியோர் கல்லுாரி விடுமுறை நாளில், முரளிதரன் கிராமத்-திற்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக நேற்று முன்-தினம் வந்திருந்தனர்.இரவு பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்நி-லையில் நேற்று காலை, 11:00 மணியளவில் குழந்தைவேல் என்-பவரின் விவசாய கிணற்றில், நண்பர்கள் ஐந்து பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்த ராம்குமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து பொது மக்கள் கொடுத்த தகவல்படி, முசிறி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பொறியியல் மாணவர் ராம்குமார் சடலத்தை மீட்டனர். நங்கவரம் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையி-லான போலீசார், சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.