உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எட்டுக்கையம்மன் கோவில் திருவிழா: 15ல் தேரோட்டம்

எட்டுக்கையம்மன் கோவில் திருவிழா: 15ல் தேரோட்டம்

நாமக்கல், நாமக்கல் - கரூர் புறவழிச்சாலை கீரம்பூர் கிராமத்தில், பிரசித்திபெற்ற எட்டுக்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 6ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 15 அதிகாலை முதல், கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கின்றனர். தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, சுவாமி உற்சவர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையடுத்து, பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் திருவீதி உலா வந்து நிலை அடையும். அன்று இரவு, 8:00 மணிக்கு, சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16 காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ