உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன பெயர் பலகை

தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன பெயர் பலகை

கரூர்: கரூர், தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன நிலையில் பெயர் பலகை காணப்படுகிறது.கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, தெருக்களை தெரிந்து கொள்ள வசதியாக, மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள பெயர்களும் அறிந்து கொள்ள முடியாத வகையில் வெளுத்து காணப்படுகின்றன. இதனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள், குழப்பம் அடைகின்றனர். தாங்கள் செல்லும் வழியை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே புதிய பெயர் பலகையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ