நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
குளித்தலை, குளித்தலை அடுத்த வதியம் பஞ்., குறப்பாளையத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 50 ஆண்டு பழமையான முள் மரம் ஒன்று இருந்தது. தற்பொது பெய்த தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், நேற்று மதியம், 1:00 மணிக்கு, கருர்-திருச்சி நெடுஞ்சாலையில் அந்த முள் மரம் அடியோடு சாய்ந்தது. இதனால், கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை ஆர்.ஐ., சேகர் மற்றும் குளித்தலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.