உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளாடு திருட்டு விவசாயி புகார்

வெள்ளாடு திருட்டு விவசாயி புகார்

குளித்தலை, இரண்டு வெள்ளாடுகள் திருடப்பட்டுள்ளதாக, விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.குளித்தலை அடுத்த, மாவத்துார் பஞ்., ஊமைநாயக்கனுாரை சேர்ந்தவர் நாகராஜ், 42, விவசாய கூலி தொழிலாளி. தான் வளர்த்து வரும் வெள்ளாடுகளை, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இரவு துாங்கிக் கொண்டிருந்தபோது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. எழுந்து வந்து பார்த்தபோது, கட்டி இருந்த இரண்டு ஆட்டு குட்டிகளை காணவில்லை. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை