உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயி துாக்கிட்டு சாவு

விவசாயி துாக்கிட்டு சாவு

குளித்தலைகுளித்தலை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 30; கூலித்தொழிலாளி. இவரது கணவர் ரஞ்சித், 38; விவசாயி. இவருக்கு கடந்த, மூன்று ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. இதனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரஞ்சித், நேற்று காலை, 9:00 மணிக்கு வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் கொடுத்த தகவல்படி, குளித்தலை போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரது மனைவி கிருஷ்ணவேணி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை