மேலும் செய்திகள்
பொத்தனுார் டவுன் பஞ்.,ல்சாக்கடை வசதி வேண்டி மனு
18-Dec-2024
குளித்தலை, டிச. 24-குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் கிராமத்தில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பொது மக்கள், டவுன் பஞ்., நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, விவசாயி போத்தராஜ் என்பவருடைய மாட்டு கொட்டகையில் புகுந்த நாய்கள், அங்கு கட்டியிருந்த பசு கன்றை கடித்து கொன்றது. இதேபோல், மஞ்சுளா என்பவரின் வெள்ளாட்டை கடித்து கொன்றது. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வர், கலெக்டர், டவுன் பஞ்., செயல் அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
18-Dec-2024