| ADDED : நவ 13, 2025 03:36 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மானாவாரி விளை நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களின் நடுவில் வளர்ந்த களைகளை, அகற்றும் பணிகளில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், பஞ்சப்பட்டி, வீரியபாளையம், பாப்பகாப்பட்டி, சிவாயம், கருப்பத்துார் ஆகிய பகுதிகளில், மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். மழை நீரால் உளுந்து செடிகள் வளர்ந்து வந்துள்ளது. தற்போது செடிகளின் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்துள்ளது. இதனால் செடிகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு, உளுந்து பயிர்கள் நடுவில் வளர்ந்த களைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில், 30 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி நடந்துள்ளது.