மேலும் செய்திகள்
வெண்டைக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள்
09-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: புதுப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் கம்பு பயிர் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில், சிறு தானிய பயிர்களான கம்பு சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கம்பு பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, செடிகளில் கதிர்கள் விளைந்து முதிர்ந்து வருகிறது. மேலும் முதிர்ந்த கம்பு கதிர்களை அறுவடை செய்யும் பணிகளில், சில நாட்களில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். மேலும், அதிக சத்து நிறைந்த தானியமாக கம்பு இருப்பதால் தற்போது தேவை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் கம்பு சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் குறைந்த செலவு மட்டுமே ஆவதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.
09-Aug-2024