உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி போராட்டம்

கிருஷ்ணராயபுரம், டிச. 24-ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக, மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நகல் எரிப்பு போராட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடந்தது.மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிரேட்டர் நொய்டாவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாய தலைவர் ஜகஜித் சிங் தலோவால், 20 நாட்களாக இருந்து வரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். விவசாயிகள் மீதான அடக்கு முறையை நிறுத்த வேண்டும் என, கோஷம் எழுப்பப்பட்டது.ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், சி.பி.எம்., மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், எஸ்.கே.எம்., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !