உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெற்றிலை விலை வீழ்ச்சியால் சோகத்தில் விவசாயிகள்

வெற்றிலை விலை வீழ்ச்சியால் சோகத்தில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், வெற்றிலை வரத்து அதிகம் காணப்பட்டதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்பள்ளி, கருப்பத்துார், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, பிள்ளபாளையம், சிந்தலவாடி, திருக்காம்புலியூர், கோவக்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். வெற்றிலைகள் பறிக்கப்பட்டு, 100 கவுளி கொண்ட மூட்டையாக கட்டப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் விற்கப்படுகிறது. கடந்த மாதம் 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 4,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது முகூர்த்த சீசன் குறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக, 100 கவுளி கொண்ட ஒரு மூட்டை, 3,000 ரூபாய்க்கு விற்பனையானது. 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி, 30 ரூபாய்க்கு சில்லரையில் விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலைகளை, மொத்தமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மேட்டுப்பாளையம், வேலுார் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலை விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை