உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறையும் அமராவதி அணை நீர்மட்டம் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

குறையும் அமராவதி அணை நீர்மட்டம் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

கரூர்: கேரளா மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், போதிய மழை இல்லாததால் அமராவதி அணையின் நீர்மட்டம் படிப்படி-யாக குறைந்து வருகிறது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கேரளா மாநிலத்தில் துவங்கும், தென்மேற்கு பருவமழை காரண-மாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் உள்ள அமரா-வதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால், கேரளா மாநிலத்தில் உள்ள நீர்ப்பி-டிப்பு பகுதிகளில் கடந்த, 15 நாட்களாக மழை இல்லாததால், அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.நடப்பு மார்ச் மாத துவக்கத்தில் அணையின் நீர்மட்டம், 57.16 அடியாக இருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து வெறும், 11 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம், 48.92 அடியாக மட்டுமே இருந்தது. கடந்த, 27 நாளில், 8.24 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது.அமராவதி அணை மூலம், கரூர் மாவட்டத்தில், 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. மேலும், அரவக்குறிச்சி, க.பர-மத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த, கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.வரும் ஜூலை மாத இறுதியில், அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என, கரூர் மாவட்ட விவ-சாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அணையின் நீர்-மட்டம் உயராததால், கரூர் மாவட்ட விவசாயிகள், தண்ணீர் திறக்-கப்படுமா என்ற கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை