வேளாண் உற்பத்தியை முறையாக செய்தால் விவசாயிகளின் வருமானம் மும்மடங்காகும்
கரூர்: கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில், க.பரமத்தி வட்டார வேளாண்துறை சார்பில் அட்மா திட்டத்தில், உழவர் தின விழா நடந்தது.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமைவகித்து, 80 பயனாளிகளுக்கு, 16 லட்சம் மானியத்தொகையும், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடுப்பொருட்களை வழங்கி பேசியதாவது: நெல், சிறுதானியம் பயறு வகை பயிர்கள் தென்னை கரும்பு மற்றும் பண பயிர்களில் வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெறச் செய்வற்காக ஒருங்கி-ணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.விவசாய நிலத்தில் சிறுதானிய சாகுபடி, மண்புழு உற்பத்தி, தேனீ வளர்ப்பு, பழக்கன்று உள்ளிட்ட வேளாண் உற்பத்தி ஆகிய-வற்றை முறையாக செய்தால், விவசாயிகளின் வருமானம் மும்ம-டங்கமாகவும், உற்பத்தி இருமடங்காகவும் பெருக்குவதற்கு வழி வகை செய்யும்.இவ்வாறு பேசினார்.வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன், ஒன்றிய குழு கவுன்-சிலர் கருணாநிதி, க.பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி, சின்னதாராபுரம் கால்நடை உதவி மருத்துவர் கலைவாணி உள்பட பலர் பங்கேற்றனர்.