உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

கரூர், ராபி சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மிளகாய், தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் சேர, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய் மற்றும் தக்காளி பயிகளுக்கு பிரதமர் பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.வாழை: சின்னதாராபுரம், புகழூர், வாங்கல், சிந்தலவாடி, கட்டளை, குளித்தலை, நங்கவரம்.மரவள்ளி: தென்னிலை, கடவூர், மயிலம்பட்டி, கரூர், மண்மங்கலம், புகழூர், வாங்கல், சிந்தலவாடி, கட்டளை, பஞ்சப்பட்டி, குளித்தலை, தாளப்பட்டி, வெள்ளியணை, நங்கவரம், தோகைமலை.வெங்காயம்: கடவூர், மயிலம்பட்டி, சிந்தலவாடி, பஞ்சப்பட்டி.மிளகாய்: பள்ளப்பட்டி, கடவூர், மயிலம்பட்டி, சிந்தலவாடி.தக்காளி: வெள்ளியணை.ஆகிய குறு வட்டங்களில் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம்.இதற்கு புகைப்படம், ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு கட்டணத்துடன் ஹெக்டேர் பிரீமிய தொகையாக தக்காளிக்கு, 3,908.80 ரூபாய், வெங்காயத்திற்கு, 2,240.3 ரூபாய், மரவள்ளி, 4,903 ரூபாய், மிளகாய், 2,915.5 ரூபாய் என வரும் ஜன.,1க்குள்ளும், வாழைக்கு, 4,863.50 ரூபாயை பிப்.,28 க்குள்ளும் பிரீமியம் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ--சேவை மையங்களில் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ