உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் முறைக்கு எதிர்ப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் மனு

பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் முறைக்கு எதிர்ப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் மனு

ஈரோடு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையிலான விவசாயிகள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:கூட்டுறவு துறையின் மாநில பதிவாளர் கடந்த, 26ல் உத்தரவு வழங்கி உள்ளார். அதில், விவசாய கடன் அட்டை மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களை பெறும் விவசாயிகளின் 'சிபில் ஸ்கோர்' பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.தமிழக அரசு உற்பத்தி செலவை கணக்கிட்டு பயிர் கடன் வழங்குகிறது. நெல் ஏக்கருக்கு உற்பத்தி செலவு, 76,000 ரூபாய் என கணக்கிட்டு, பயிர் கடனாக, 36,000 ரூபாயே வழங்குகிறது. எனவே கூடுதல் செலவை சமாளிக்கவே, தேசிய வங்கிகளில் விவசாயிகள் பயிர் கடன், பிற கடன்களை பெறுகின்றனர். விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியால் பெரிய லாபம் கிடைப்பதில்லை. சிறு, குறு விவசாயிகள் கடும் பாதிப்பு, இழப்பை சந்திப்பதால் தான், மத்திய, மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்கிறது. இச்சூழலில் கல்வி கடன், நகைக்கடன், பிற கடன் பெற்ற விவசாயிகளின் 'சிபில் ஸ்கோரை' பார்த்து பயிர் கடன் அனுமதித்தால், எந்த விவசாயியும் கடன் பெற முடியாது. எனவே இந்த உத்தரவை உடன் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.இதேபோல் சிபில் ஸ்கோர் பார்க்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு தலைமையிலான விவசாயிகள் மனு வழங்கி, உத்தரவை திரும்ப வலியுறுத்தினர்.அங்கன்வாடி மையத்தில் குழந்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை