மேலும் செய்திகள்
இரண்டாவது மனைவி கொலை கணவர் கைது
17-May-2025
கரூர்: கரூர் அருகே, மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூர்-ஈரோடு சாலை பகுதியை சேர்ந்தவர், 45 வயது கூலி தொழிலாளி. இவருக்கு, 19, 16, 11 ஆகிய வயதில் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்., 22 முதல், மூன்று மகள்களுக்கும், தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவரது மனைவி பல முறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. இதனால், கரூர் மகளிர் போலீசில், அவர் புகார் அளித்தார்.இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
17-May-2025