இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்
கரூர், வெள்ளியணை அருகே, இளம் பெண்ணை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை வடக்கு ராஜா தெருவை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் கார்த்திகா, 23; திருமணமாகாதவர். இவர் கடந்த, 2ல், வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மோகன்தாஸ், போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.