உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி ஆசிரியரிடம் பண மோசடி குளித்தலையில் பெண் ஏஜென்ட் கைது

பள்ளி ஆசிரியரிடம் பண மோசடி குளித்தலையில் பெண் ஏஜென்ட் கைது

குளித்தலை, குளித்தலையில், பள்ளி ஆசிரியையிடம் பண மோசடி செய்த பெண் லோன் ஏெஜன்ட் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஜெயலட்சுமி, 53, என்பவர் ஆசிரியையாக பணிபுரிகிறார். திருச்சி மாவட்டம், திருச்செந்துார் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கீதா, 51, கார்த்திக் ஆகியோர் லோன் ஏஜென்டாக வேலை பார்த்து வருகின்றனர். ஆசிரியையிடம் பேசிய இவர்கள், தனியார் வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்கு அவர், 5 லட்சம் ஏற்பாடு செய்து தரும்படி கூறியுள்ளார்.இந்நிலையில் ஜெயலட்சுமி வங்கிக் கணக்கில் 9, லட்சத்து 41, ஆயிரத்து, 150 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதைத் தெரிந்த லோன் ஏஜென்ட் கீதா, உங்களது வங்கி கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக கூறி, ஜெயலட்சுமியிடம் கையொப்பம் பெற்று, பணத்தை தன் பெயருக்கு மாற்றி கீதா நம்பிக்கை மோசடி செய்தது தெரியவந்தது.பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி, கரூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோன் ஏஜென்ட் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து நேற்று, குளித்தலை ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் எண்-1ல் கீதாவை ஆஜர்படுத்தினர். பின்னர், திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அவரை போலீசார் அடைத்தனர். கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை