உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண் தொழிலாளி மொபட் திருட்டு

பெண் தொழிலாளி மொபட் திருட்டு

கரூர், :கரூரில், பெண் தொழிலாளியின் மொபட்டை திருடி சென்ற, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சிவசக்தி நகரை சேர்ந்த ரவி என்பவரது மனைவி சிலும்பாயி, 42, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 4ல் திருவள்ளுவர் மைதானத்தின் பின்புறம், டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார்.சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, மொபட்டை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிலும்பாயி, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !