மேலும் செய்திகள்
பள்ளியில் பயிற்சி முகாம்
19-Oct-2024
அரவக்குறிச்சி: வடகிழக்கு பருவ மழையை ஒட்டி, அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடத்தினர். இதில், மாணவர்களுக்கு வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
19-Oct-2024