உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கரூர், கரூர் டவுன் போலீஸ் சரகம் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் பூச்சொரிதல் கமிட்டி சார்பில், திருவிழா ஆலோசனை கூட்டம், நகரத்தார் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது.அதில் வரும், 16 இரவு கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழாவையொட்டி, 48 இடங்களில் பூச்சொரிதல் ஊர்வலம், பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு விடிய, விடிய செல்லும் போது, விதிமுறைகளை கடைப்பிடிப்பது, குறிப்பிட்ட நேரத்தில் பூச்சொரிதல் ஊர்வலத்தை தொடங்கி, நிறைவு செய்வது குறித்து பல்வேறு விதிமுறைகள் குறித்து டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் பேசினார்.கூட்டத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார், கமிட்டி தலைவர் மதன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் மற்றும் பூச்சொரிதல் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ