உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா

கரூர்;கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவின், 80 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவப் படத்துக்கு, கரூர் வடக்கு நகர தலைவருமான ஸ்டீபன் பாபு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர், மாநகர தலைவர் வெங்கடேஷ், கிழக்கு நகர தலைவர் கண்ணப்பன் உள்பட, காங்., கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.* கரூரில் சுதந்திர போராட்ட வீரர் குமரன் சிலை முன், முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவப்படத்துக்கு, மாவட்ட முன்னாள் காங்., கட்சி தலைவர் பாங்க் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, காங்., கட்சி நிர்வாகிகள் மனோகரன், துணைத்தலைவர்கள் சின்னையன், நாகேஷ்வரன், ரவிச்சந்திரன், முனீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி