மாஜி ரயில்வே ஊழியர் மாயம்: மகன் புகார்
கரூர், டிச. 4-கரூர் மாவட்டம், பாலம்மாள்புரம் கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் வேலாயுதம், 63; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் கடந்த, 1ம் தேதி மாலை வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பி வரவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கும் வேலாயுதம் செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த வேலாயுதத்தின் மகன் செந்தில்குமார், 36, தன் தந்தையை காணவில்லை என போலீசில் புகார் செய்துள்ளார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.