உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

கரூர், 'வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், நாளை நடக்கிறது' என, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே, பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், நாளை நடக்கிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், நேரடியாக பயிற்சி தினத்தில் காலை, 10:30 மணிக்கு வந்து பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண், 04324-294335 மற்றும் மொபைல் எண், 7339057073 மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை