மேலும் செய்திகள்
கொலையாய் நடக்கிறது...
30-Nov-2024
கரூர்: அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, காந்திகிராமம் பகுதிகளில் பெருவாரியான தெருக்களில், தனித்தனி வீடுகள்தான் அதிகளவு உள்ளன. இந்த குடியிருப்புகளை குறி வைத்து, இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. தற்போது தான்தோன்றிமலையில் பூங்கா நகர், அசோக் நகர், பாரதிதாசன் நகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து, திருடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை அதிக பரப்பளவை கொண்டது. பசுபதிபாளையம் எல்லையில் இருந்து பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. கடந்த, 2ல் தான்தோன்றிமலை ஓம் சக்தி நகரில் தண்ணீர் கேட்பது போல நடித்து பெண்ணிடம், 2 பவுன் தங்க செயின் பறித்த சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் பீதியில் இருப்பதால், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்.
30-Nov-2024