உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்:6 பேர் கைது

வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்:6 பேர் கைது

கரூர்: கரூர், வையாபுரி நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 60; இவரது வீட்டில் பணம் வைத்து, சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் சென்றது. இதையடுத்து கடந்த, 29 மதியம் கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட, போலீசார் முருகேசன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக முருகேசன், பரமசிவம், 70; சுப்பையா, 54; முனியமுத்து, முத்து குமாரப்பன், 45; கிருஷ்ணமூர்த்தி, 39; ஆகிய, ஆறு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 15 ஆயிரத்து, 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை