உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் அவஸ்தை

சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் அவஸ்தை

கரூர்:கரூர் மாநகராட்சியை அடுத்து, காதப்பாறை கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் பல சாலைகளில் குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். பலமுறை பஞ்., நிர்-வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, அப்-பகுதி மக்கள் புலம்புகின்றனர். மழை பெய்யும் போது, தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்-நாற்றம் வீசுகிறது. கிராம பஞ்., பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதால், குவிந்துள்ள குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !