பள்ளி அருகே தேங்கியுள்ள குப்பை நோய் தொற்று ஏற்படும் அபாயம்
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி, அரசு உதவி பெறும் மேல்நிலைப்-பள்ளி அருகே உள்ள சாலையில், தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலையில் பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1,000-க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதன் எதிர்ப்புறம் தனியார் பள்ளியும், இதன் அருகே குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் மின்-வாரிய அலுவலகமும் அமைந்துள்ளது. இது வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை.பள்ளி அருகே உள்ள சாலையின் பக்கவாட்டில், நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் இருக்கும் குப்-பைகளும், கழிவுநீரும் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நேரில் பார்வை-யிட்டு குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.