கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம்
கரூர், கரூர்-- மதுரை சர்வீஸ் சாலையில், இருபுறமும் குப்பை கொட்டப்படுவ தால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை, சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, சாலையில் குப்பை கழிவுகள் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். மழை பெய்யும்போது, சர்வீஸ் சாலையில் உள்ள குப்பைகள், நனைந்து அழுகும் நிலை உள்ளது.எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின், சர்வீஸ் சாலை சின்ன ஆண்டாங்கோவில் பிரிவில், அதிகளவில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.