உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பொது மேலாளர் ஆய்வு

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பொது மேலாளர் ஆய்வு

கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 34 கோடி ரூபாய் செலவில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும், அம்ரித் பாரத் திட்டப்பணிகளை பார்வையிட்ட அவர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் மற்றும் கரூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ