மேலும் செய்திகள்
தெரிந்ததும்... தெரியாததும்!
15-Nov-2024
கரூர்: ''பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும், இடைநின்றல் இருக்கக்கூடாது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து பேசியதாவது: பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். இடைநின்றல் இருக்கக்கூடாது அவ்வாறு இடைநின்றால், அவர்களுக்கு இளம் வயது திருமணம், குழந்தை தொழிலாளர் முறை போன்றவை நடக்க வாய்ப்பாக உள்ளது. இதை அங்கன்வாடி பணியாளர்கள் கண்காணித்து அரசுக்கு தகவல் தெரிவித்து தடுத்திட வேண்டும். மேலும், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் போன்றவைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.தவறாக நடந்துகொள்ளும் நபர்கள் மீது, புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 918 பெண்களும், 2024ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு, 923 பெண்களும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பாலினம் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக, சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரியா, பாதுகாப்பு அலுவலர் பார்வதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Nov-2024