உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூரில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை செயல்படு-கிறது. சந்தையில் ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனை செய்-யப்படுகின்றன. சிவாயம், வயலுார், பாப்பகாப்பட்டி, சத்தியமங்களம், கழுகூர் பகுதிகளில் இருந்து, விவசாயிகள்வளர்க்கும் ஆடுகள், கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். கிராமங்களில் வைகாசி மாத திருவிழா, முகூர்த்த தினம் ஆகி-யவை இருப்பதால் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய விவசா-யிகள் கொண்டு வந்தனர். 7 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டுகோழி கிலோ, 480 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடு, கோழிகளை கரூர், குளித்-தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, சேங்கல் பகுதி வியாபா-ரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி