உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மிளகாய் பொடி துாவி தாக்கி விட்டு விவசாயிடம் தங்க செயின் பறிப்பு

மிளகாய் பொடி துாவி தாக்கி விட்டு விவசாயிடம் தங்க செயின் பறிப்பு

குளித்தலை:விவசாய கூலி தொழிலாளியை தாக்கி, அவரிடம் இருந்து மூன்று பவுன் தங்கச் செயின் பறித்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் டி.இடையபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 50. விவசாய கூலித் தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் கடந்த 20 இரவு, 8:30 மணியளவில் சொந்த வேலையாக சென்று விட்டு, தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இருவக்கரையூர் கன்னிமார்பாளையம் செல்லும் மண் சாலையில், மயானம் அருகில் தனக்கு பின்னால் வந்த தேக்கமலை கோவில்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 31, திருச்சி மாவட்டம், அணியாப்பூர் அடுத்த ராமநாதபுரம் மோகன்ராஜ், 26, ஆகிய இருவரும் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வந்து வழி மறித்தனர்.சற்று நேரத்தில், வெள்ளைச்சாமியை கீழே தள்ளிவிட்டு, அவர் மீது மிளகாய் பொடி துாவி தாக்கி விட்டு, கழுத்தில் அணிந்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பினர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளைச்சாமி அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி