உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரக்குத்தி கிராமத்தில் சீரான குடிநீரின்றி அவதி

கோரக்குத்தி கிராமத்தில் சீரான குடிநீரின்றி அவதி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்.,க்குட்பட்ட கோரக்-குத்தி, நத்தமேடு பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்-றனர். இப்பகுதி மக்களுக்கு, காவிரி ஆற்றில் இருந்து குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கமால் இருந்து வருகின்றனர். எனவே, இந்த கிராமத்திற்கு காவிரி நீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, யூனியன் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !