சென்னை டாக்டருக்கு கத்திக்குத்து அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை டாக்டருக்கு கத்திக்குத்துஅரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்கரூர், நவ. 15-கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததது. மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமைவகித்தார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை டாக்டர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளியை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காததற்கு தடுப்பு நடவடிக்கையை, அரசு எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொருளாளர் நந்தகுமார், நிர்வாகிகள் வசந்த கீதன், சண்முகநாதன், சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.