மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
14-Oct-2025
கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், கரூர் வணிகவரிதுறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். முன் தேதியிட்டு மத்திய அரசு வழங்குவது போல, மாநில அரசு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். தமிழக சட்டசபையில் தாக்கல் செய்த பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
14-Oct-2025