உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி

பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி

கரூர்: ''தமிழக பா.ஜ., தலைவர் போல, கவர்னர் செயல்படுகிறார்,'' என, கரூர் காங்.,--எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.கரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கவர்னர் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், திராவிடம் என்ற சொல் இடம் பெறவில்லை. அது கண்டனத்துக்குரியது. திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல. அது தமிழகம் உள்ளிட்ட, நான்கு தென் மாநிலங்களை குறிக்கும்.தமிழக கவர்னர் தொடர்ந்து, தமிழக அரசையும், முதல்வரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார். இதனால் தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு உள்ள, குறைந்த ஓட்டுக்களும் காணாமல் போய் விடும்.மத்திய அரசு மூலம், தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதி மக்களின் வரிப்பணம். அது பிரதமர் மோடி வீட்டில் இருந்து வரும் பணம் இல்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கையால், எந்த பாதிப்பும் இல்லை. இரு மொழி கொள்கையில் படித்த, தமிழ-கத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.தமிழக மக்கள், ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. தமி-ழகம் முழுவதும் ஹிந்தி பிரசார சபாக்கள் செயல்படுகிறது. சில பள்ளிகளில், மூன்றாவது மொழியாக ஹிந்தி உள்ளது. தமிழ-கத்தில் ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு, உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nagarajan S
அக் 19, 2024 18:16

மு,,,,,,,,,,,, தனமாக பேசுவதில் இந்த எம் எல் ஏக்கள், எம்பிக்களை என்ன சொல்வது? முழுவிபரமும் தெரியாமல் வேண்டுமென்றே கவர்னர் மேல் பழிபோட்டு அவர்தான் தமிழ் தாய் வாழ்த்தில் ஒருவரியை விட்டது போல அவசர அவசரமாக அறிக்கைவிட்டு, பின் தூர்தர்ஷன் தவறுக்கு மன்னிப்பு கேட்டபிறகு இவர்கள் முகத்தை எங்கே காட்டுவார்கள்?


Amar Akbar Antony
அக் 19, 2024 12:29

எதற்கெல்லாம் ஒன்றிய அரசை குறை கூறுவீர்கள்? ஒரு வாயிலிருந்து வரவேண்டிய வார்த்தைகள் பாடுபவர்கள் விட்டுவிட்டால் அல்லது மறந்துவிட்டு முழுதும் பாடிவிட்டால் கட் என கூற இசை அமைப்பதில்லையே? ஆக பாடுபவர்கள் குறைசெய்தபின்னர் - தவறை அந்த தமிழர்கள் மீதுதான் குறைசொல்லவேண்டும் தன் தாய்மொழி வாழ்த்தை கூட சரியாக பாடத்தெரியவில்லை??? இது ஒன்றியத்தின் குற்றமா???? அல்லது அரண்மனை குற்றமா? ஒருவேளை வலுக்கட்டாயமாக குறிப்பிட்ட வரியினை தவிர்க்க சொல்லியிருந்தாலும் அதை ஏற்று பாடியவர்கள் தமிழன்னை செய்த பாவமா??? எத்துணையோ விடயங்களிருக்க அவசரப்பட்டு கோபப்பட்டு வார்த்தைகளைவிட்டவர்கள் அமைதியாகிவிட்டார்கள். நீங்கள் அரண்மனையின் அடிமைகள் வக்காலத்து வாங்குகிறீர்கள்.


புதிய வீடியோ