அரசு மாணவர்கள் விடுதி கலெக்டர் நேரில் ஆய்வு
அரசு மாணவர்கள் விடுதிகலெக்டர் நேரில் ஆய்வுகரூர், நவ. 10-கரூர் மாவட்டம், வெங்ககல்பட்டி பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவியர் விடுதி, அருகம்பாளையம் கல்லுாரி மாணவர்கள் விடுதி மற்றும் காந்தி கிராமம் ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவர்கள் விடுதிகளை, கலெக்டர் தங்க வேல் ஆய்வு செய்தார்.அப்போது, மாணவ மாணவிகளுக்கு தினமும் வழங்க வேண்டிய உணவு வகைகள், பட்டியல் படி வழங்கப்படுகிறதா என்பதையும், சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து, குடிப்பதற்காக வைக்கப்பட்ட குடிநீரை குடித்து பார்த்தார். மாணவர்கள் படிக்கும் அறை, உறங்கும் அறை, உணவுக்கூடம், கழிவறை உள்ளிட்டவைகளின் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின், மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களின் இயக்கங்களை பார்வையிட்டு, மாணவ மாணவிகள் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சண்முக வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.