உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

கரூர், சுதந்திர தின விழாவையொட்டி, பாகநத்தம் கிராம பஞ்சாயத்து, வெடிக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.அதில், கிராம பஞ்சாயத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வரும் காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வருவாய்-செலவு கணக்கு உள்ளிட்ட, பல்வேறு அரசு துறை சார்ந்த கொள்கை முடிவுகள், பொதுமக்களு க்கு விளக்கம் அளிக்கப்பட்டது.கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், எம்.எல். ஏ., சிவகாம சுந்தரி, டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஆர்.டி.ஓ., முகமது பைசல், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், பி.டி.ஓ.,க்கள் ேஹமாவதி, வினோத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். பிறகு, கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நடந்த, சுதந்திர தின விழா சமத்துவ விருந்தில், கலெக்டர் தங்கவேல் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது, பல்வேறு அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர். * கருப்பத்துார் பஞ்., சார்பில் கிராம சபை கூட்டம் மேட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பஞ்., செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். இதில், பஞ்சாயத்தில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்னை, தெரு விளக்கு பராமரிப்பு, கலைஞர் கனவு இல்லம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. புதிய சிமென்ட் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் தூய்மை பணி ஆகிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, தாளியாம்பட்டி பகுதி மக்கள், யூனியன் அலுவலர்கள், பஞ்சாயத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* சித்தலவாய் பஞ்., சார்பில் கிராம சபை கூட்டம் முனையனுாரில் நடந்தது. வி.சி.க., ஒன்றிய செயலர் மகாமுனி, மக்களின் கோரிக்கைகளை கிராம சபை கூட்டத்தில் வழங்கினார்.* மாயனுாரில் நடந்த கூட்டத்தில், விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். * குளித்தலை அடுத்த நல்லுார் பஞ்.,அலுவலகம் முன், கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பஞ்., செயலாளர் மதியழகன் தீர்மானங்களை வாசித்தார். இதேபோல் பொய்யாமணி, இனுங்கூர், குமாரமங்கலம், ராஜேந்திரம், வைகைநல்லுார், சத்தியமங்கலம் உள்ளிட்ட, 12 பஞ்., களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பஞ்., செயலர்கள் கதிர்வேல், லெனின், பழனி, பன்னீர், ரமா, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேசியக்கொடியேற்றப்பட்டது. பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !