கரூர் தபால் நிலையத்தில் கைத்தறி கண்காட்சி
கரூர், கரூர் தலைமை தபால் நிலையத்தில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் சார்பில் கைத்தறி கண்காட்சி நடந்தது.தபால் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தொடங்கி வைத்தார். பாரம்பரிய கைத்தறி சேலைகள், கைத்தறி பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. மேலும் தோகைமலை தபால் நிலையத்தில், நெசவாளர்களுக்கு சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டது. கரூர் தியாகி குமரன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்திற்கு, தபால் நிலைய ஊழியர்கள் கள பயணம் மேற்கொண்டனர். அங்கு, கைத்தறி உற்பத்தியை பார்வையிட்டனர்.நிகழ்ச்சியில், கரூர் கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிகுமார், கோ ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.